Actress Gossips

ஐஸ்வர்யா ராஜேஷின் போஸ்ட்டுகள்இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோஸ்

Aishwarya Rajesh

 ஐஸ்வர்யா ராஜேஷ்  அவர்கள்  ஒரு இந்திய நடிகை ஆவார் இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் முதன்மையாக தமிழ் படங்களில் பணியாற்றுகிறார் ஐஸ்வர்யா நான்கு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் ஒரு தென்னிந்திய பிலிம் பேர் விருது மற்றும் ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் ஜனவரி 10 1990 இல் பிறந்தார் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பி காம் பயின்றுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வாழ்க்கையை தொலைக்காட்சி தொகுப்பாளராக அசத்தப்போவது யாரு என்னும் நகைச்சுவை நிகழ்ச்சியில் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து மாநாட மயிலாட ரியாலிட்டி சோவில் வெற்றி பெற்ற பிறகு அவர்களும் இவர்களும் என்னும் திரைப்படத்தில் நடித்தார் மற்றும் அட்டகத்தி படத்தில் 2012  ஆம் ஆண்டு நடித்த பிறகு முக்கியத்துவம் பெற்றார் அதனை தொடர்ந்து 2014 ஆம்  ஆண்டு காக்கா முட்டை திரைப்படத்தின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை பெற்றார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்  அவர்கள் 2018 ஆம் ஆண்டு  வடசென்னை மற்றும் அவரது தனி படமான கானா ஆகியவற்றில் சிறப்பாக நடித்தார். மேலும் வெற்றி கண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் 2020 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியுடன்  இணைந்து கா  பெ ரண சிங்கம் என்னும் திரைப்படத்தில்  நடித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு ரம்மி என்னும் திரைப்படத்தில் சொர்ணா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ஆறாவது சினம் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார் அதே ஆண்டு விஜய் சேதுபதியுடன் இணைந்து தர்மதுரை என்னும் திரைப்படத்தில் அன்புச்செல்வி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை என்னும் திரைப்படத்தில்  சிவகார்த்திகேயன் அவர்களுக்கு தங்கையாக நடித்துள்ளார் இந்த திரைப்படம் அபூர்வ வெற்றியை கண்டது.

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் 2007 ஆம் ஆண்டு அசத்தப்போவது யாரு என்னும் நகைச்சுவை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார் 2022 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 6 விருந்தினராக சென்றுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் தனது இணையதளத்தில் மாடர்ன் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் அவர் தொடர்ந்து இணையத்தில் இணைந்துள்ளார். 

Aishwarya Rajesh

Aishwarya Rajesh

Aishwarya Rajesh

Aishwarya Rajesh

Aishwarya Rajesh

Aishwarya Rajesh

Aishwarya Rajesh

Aishwarya Rajesh

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top