Actress Gossips

பாக்கியலட்சுமி தொடரின் ராதிகா அவர்களின் டே க்ளிக் புகைப்படம் இணையத்தில் வெளியீடு.

Reshma pasupuleti

ரேஷ்மா பசுபுலேட்டி  என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை மற்றும் அடி விலகி மற்றும் தொகுப்பாளர் ஆவார் இவர் நடிகர் பாபி சிம்மாவின் உறவினர் ஆவார்.

இவர் ஜூலை 23 1983 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்தார் இவரது தந்தை பிரசாந்த்  பசுபுலேட்டி  அவர்கள் தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற  பாத்திரத்தில்நடித்துள்ளார்.

மேலும் இவர் மலையாள தமிழ் இரு மொழி திரைப்படமான  கேர்ல்ஸ்யில் பணிபுரிந்தார்  நெட் பிக்ஸ் இந்தியாவின் 2019 புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கியுள்ளார்  இவர் இந்தியாவில் மீ டு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு துறையில் நுழைவதற்கு முன்பு இவர் ஒரு விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்துள்ளார் இவர் பிக் பாஸ் தமிழ் 3 இல் அசல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார்.

 2015 ஆம் ஆண்டு மசாலா படம் என்னும் திரைப்படத்தில் அங்கீதா என்னும் கதாபாத்திரத்தில் அறிமுகமானார் அதனை தொடர்ந்து இனிமையான நாட்கள் என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு திரைக்கு வராத கதை என்னும் இரு மொழி திரைப்படத்தில் கிளாரா என்னும் கதாபாத்திரத்தில் நடத்துள்ளார் அது மட்டுமல்லாது கோ டு என்னும் திரைப்படத்தில் தீபா என்னும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் அதனை தொடர்ந்து மணல் கயிறு 2 என்னும் திரைப்படத்தில் சந்திரா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் 2014 ஆம் ஆண்டு மரகதவீணை என்னும் சன் தொலைக்காட்சி தொடரில் திவ்யா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடரான உயிர்மெய் என்னும் தொடரில் சுமதி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் அதே ஆண்டு  சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வம்சம் என்னும் தொடரில் சுப்ரியா என்னும் கதாபாத்திரத்தில் நடத்துள்ளார் மேலும் ஆண்டாள் அழக என்னும் விஜய் தொலைக்காட்சி தொடரில் மலர்விழி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் ரேஷ்மா அவர்கள் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகின்ற பாக்கியலட்சுமி என்னும் தொடரில் ராதிகா  என்னும் கதாபாத்திரத்தில்  நடித்து வருகிறார் இத்தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறார்.

ரேஷ்மா அவர்கள் தனது இணையதளத்தில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் மேலும் வீடியோஸ்களையும் வெளியிட்டுள்ளார் அது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Reshma pasupuleti

Reshma pasupuleti

Reshma pasupuleti

Reshma pasupuleti

Reshma pasupuleti

Reshma pasupuleti

Reshma pasupuleti

Reshma pasupuleti

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top