Actress Gossips

பாக்கியலட்சுமி தொடரின் ஜெனிபர் அவர்களது மாடன் லுக் இணையத்தில் வெளியீடு

divya ganesh

திவ்யா கணேஷ் அவர்கள் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடலாவார்அவர் முக்கியமாக தமிழ் தொலைக்காட்சி துறை மற்றும் திரைப்பட துறையில் பணியாற்றி வருகிறார்.

திவ்யா கணேஷ் அவர்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சுமங்கலி என்ற தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அவர் மிகவும் பிரபலமானார் ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு படங்கள் மற்றும் நிகழ்ச்சியிலும் பணியாற்றியுள்ளார்.

மேலும் இவர் பல்வேறு பிரபலமான பிராண்டு களுக்காக பல போட்டோ சூட்ளை நடத்தியுள்ளார் திவ்யா கணேஷ் அவர்கள் செப்டம்பர் 12 1994 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் பிறந்தவர்.

இவரது தந்தையின் பெயர் கணேஷ் இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார் இவரது தாயார் இல்லத்தரசி நடிகையாக வேண்டும் என்பதை பார்த்து நடிப்புத் துறையில் இருக்க அவரது பெற்றோர் எப்போதும் ஆதரவளித்தனர் .

திவ்யா அவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார் அதன் பின்பு சென்னையில் சட்டபட்ட படிப்பை முடித்துள்ளார் 2015 ஆம் ஆண்டு கேளடி கண்மணி என்ற தமிழ் தொலைக்காட்சி தொடரின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார்.

இந்த தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது தொடரில் இவர் செம்பருத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதனை தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு என்ற மற்றொரு முன்னணி பாத்திரத்தில் நடித்தார்.

2022 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாக்கியலட்சுமி என்ற பிரபலமான தொலைக்காட்சி தொடரில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடந்து வருகிறார்.

 திவ்யா கணேஷ் அவர்கள் தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் ரத்தம் ரிங்கா இயக்கிய அட்டு என்ற தமிழ் திரைப்படத்தில் தோன்றியுள்ளார் இத்திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது அதனை தொடர்ந்து அவரை பிரபல நட்சத்திரமாக்கியது .

திவ்யா கணேஷ்அவர்கள் சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார் மேலும் தனது புகைப்படங்களையும் அப்டேட் செய்து வருகிறார்.

divya ganesh

divya ganesh

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top